1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. seeman said sivakarthikeyan called him to cinema

அரசியல் வேணாம்னே. நடிக்க வாங்க!.. சீமானுக்கு சிவகார்த்திகேயன் சொன்ன அட்வைஸ்!..

seeman sk
திரைத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களில் சீமானும் ஒருவர். சில திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். 15 வருடங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியல் செய்ய தொடங்கினார். அதிமுக, திமுக போன்ற திராவிட கட்சிகளுக்கு எதிராக பேசத் தொடங்கினார். மேலும் தமிழ் தேசியத்தை கையில் எடுத்தார்.

இதன் காரணமாக திராவிட கட்சிகளுக்கு மாற்றை விரும்பியவர்கள் சீமானுக்கு வாக்களித்தனர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி 30 லட்சம் வாக்குகளை பெற்றது. 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியும் சீமான் உட்பட சில நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்வார்கள் என பலரும் எதிர்பார்த்தனர். சீமானும் அப்படித்தான் நம்பினார். ஆனால் நடிகர் விஜயின் அலை நாம் தமிழர் கட்சியை காலி செய்துவிட்டது..

காரைக்குடியில் போட்டியிட்ட சீமான் உட்பட அனைத்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். தற்போது வருகிற அக்டோபர் 6ம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால் அந்த இரண்டு தொகுதிகளிலும் சீமான் பிரச்சாரம் செய்தார்.

இந்நிலையில், மதுராந்தகத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிமுகம் செய்து பேசிய சீமான் ‘சினிமாவுல நடிச்சாதான் ஓட்டு போடுவீங்கன்னா நான் சினிமாவுக்கு போறேன். சினிமாவுல நல்ல காசு கொடுக்குறாங்க.. என் தம்பி சிவகார்த்திகேயன் படத்தில் நடிச்சுட்டு இருக்கேன்.. நல்லா போகுது.. சிவகார்த்திகேயன் தம்பி என்கிட்ட ‘அரசியலை விட்டுட்டு சினிமாவுக்கு வாங்கண்ணே.. கொஞ்ச நாள் மக்கள் உங்களை தேடட்டும்’ என்று சொன்னார்.. ‘மக்கள் என்னை தேட மாட்டார்கள்.. அப்படி தேடுவதாக இருந்தால் என்னை வெற்றி பெற வைத்திருப்பார்கள்’ என்று சீமான் பேசினார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
வீட்டு வேலை என்று ஓமன் சென்ற இளம்பெண் தவிப்பு.. தூதரகம் மூலம் இந்தியாவுக்கு வரவழைக்கப்படுவாரா?