வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 மே 2024 (13:53 IST)

தனிச்சு நின்னு ஜெயிச்சு காட்டு.. கட்சிய கலைச்சிட்டு போயிடுறேன்! – அண்ணாமலைக்கு சீமான் சவால்!

Seeman
பாஜக தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியா என்ற கேள்விக்கு நாம் தமிழர் கட்சி சீமான் பேசியுள்ளது வைரலாகியுள்ளது.



இந்திய மக்களவை தேர்தல் பல கட்டங்களாக நடந்து வருகிறது. முதற்கட்ட தேர்தலிலேயே தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என மூன்று கூட்டணிகள் இடையே போட்டி நிலவி வருகிறது. இந்த தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல தனித்தே போட்டியிட்டனர்.

விரைவில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்க உள்ள நிலையில் பாஜகதான் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி என பாஜக தலைவர்கள் சிலர் கருத்து கூறி வருகின்றனர். இதுகுறித்து சீமானிடம் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பியபோது பதில் அளித்த அவர் “ஆண்மகனாக இருந்தால் கூட்டணி இல்லாமல் தனித்து நின்று எங்களை விட அதிக வாக்குகள் வாங்கி காட்டட்டும். அப்படி செய்தால் நான் கட்சியை கலைத்து விடுகிறேன். கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கியை பலமாக வைத்துக் கொண்டு பாஜக பேசக்கூடாது” என்று பதில் அளித்துள்ளார்.

மேலும், பாஜகவினர் நிலவுக்கு ராக்கெட் விட்டதை சாதனையாக சொல்லிக் காட்டுவதாகவும், ஆனால் வாழும் பூமியை பாதுகாக்காமல் அழித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டி பேசியுள்ளார்.

Edit by Prasanth.K