ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2024 (15:55 IST)

’மைக்கை கையில் எடுக்கட்டுமா..?’ ரொம்ப தேங்க்ஸ் தம்பி! – விஜய் பாடலை ஒலிக்கவிடும் நாம் தமிழர் கட்சி!

Mic
மக்களவை தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வரும் நிலையில் நேற்று வெளியான விஜய்யின் பாடலை தேர்தலில் பல இடங்களில் பயன்படுத்தி வருகின்றனர் நாம் தமிழர் கட்சியினர்.



மக்களவை தேர்தல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சார வேலைகள் களைகட்டி வருகின்றன. திரும்பும் திசையெல்லாம் கட்சி பாடல்கள், பிரச்சார கருத்துகளை ஒலிக்கவிட்டபடி வாகனங்கள் சென்றுக் கொண்டிருக்கின்றன. இந்த மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடும் நிலையில் அவர்களது விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாதகவுக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது

அது வேண்டாமென வேறு சின்னம் கேட்டும் அவர்களுக்கு கிடைக்காததால் மைக் சின்னத்திலேயே போட்டியிடுகின்றனர். இந்நிலையில்தான் நேற்று ‘கோட்’ படத்திற்காக விஜய் பாடிய ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. அந்த பாடலில் “மைக்கை கையில் எடுக்கட்டுமா.. கேம்பெய்னை தொடங்கட்டுமா?” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.

தங்களது மைக் (ஒலிவாங்கி) சின்னத்தை மக்களிடையே கொண்டு செல்ல பெரிதும் முயன்று வந்த நாதகவினர் தற்போது இந்த பாடல் வரிகளை மட்டும் கட் செய்து தேர்தல் பரப்புரை வாகனங்களில் ஒலிக்கவிட்டு செல்வதோடு, சோசியல் மீடியாக்களிலும் ஷேர் செய்து வருகின்றனர்.

Edit by Prasanth.K