தொடர்புடைய செய்திகள்
- சூப்பர் ஸ்டார் பட்டம் ஒருவருக்கே உரியது அல்ல! – ரஜினி ரசிகர்களுக்கு சீமான் கண்டனம்!
- தமிழ்நாடு அரசின் 'மக்கள் ஐடி' என்பது என்ன? 'ஆதார்' எண்ணுக்குப் போட்டியா?
- ஆதார் போல் தமிழ்நாடு மக்களுக்கு தனி ஐ.டி: தமிழக அரசு
- பைத்தியக்காரன் மாதிரி கேள்வி கேட்காதே.. பத்திரிகையாளரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சீமான்
- பொங்கலுக்கு இலவசம்! இதைவிட அவமானம் உண்டா? – சீமான் விமர்சனம்!
குடும்ப அட்டை இருக்கும்போது மக்கள் ஐடி எதற்கு? சீமான் கேள்வி
குடும்ப அடையாள அட்டை இருக்கும் நிலையில் மக்கள் ஐடி எதற்கு என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஏற்கனவே இந்தியாவில் உள்ள 95 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கி உள்ளது என்பதும் இந்த ஆதார் அட்டை குடும்ப அட்டை, வங்கி கணக்கு, எலக்ட்ரிக் எண் என அனைத்திலும் இணைக்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென தமிழக அரசு மக்கள் ஐடி என்ற புதிய அடையாள அட்டையை உருவாக்க போவதாக அறிவித்துள்ளது.
தமிழகம் சார்ந்த திட்டங்களுக்கு இந்த மக்கள் ஐடி அவசியம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டாலும் இது வீண் செலவு என அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து கூறிய போது தமிழ்நாட்டிற்கு என தனியான அடையாள அட்டை எதற்காக பயன்படும் என்பதில் தெளிவில்லை என்று தெரிவித்தார். மேலும் குடும்ப அட்டைகள் இருக்கும்போது மக்கள் ஐடி என்ற தனி அடையாள அட்டை எதற்கு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
