1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. seeman get money from sasikala says raja

சீமானுக்கு சசிகலா ரூ.11 கோடி நிதி வழங்கினார். நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர் பேட்டி..!

Seeman
சீமானுக்கு சசிகலா ரூ.11 கோடி நிதி வழங்கினார் என நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி புரட்சித் தமிழர் கட்சி தொடங்கியுள்ள ராஜா பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகத் தமிழர்களின் திரள் நிதியின் மூலம் சீமானுக்கு அதிகளவு வருவாய் கிடைக்கிறது. அவரது பெயரில் மற்றும் மனைவியின் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வாங்கி வைத்துள்ளார். 2011ல் சசிகலாவிடம் ரூ.11 கோடியை சீமான் வாங்கினார்.

தேர்தல் காலங்களில் பல கட்சிகளிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு வேட்பாளரை அறிவிப்பார் என   புரட்சித் தமிழர் கட்சி தொடங்கியுள்ள ராஜா பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சில அரசியல் தலைவர்கள் கூறிவரும் நிலையில் அவர் அரசியல் கட்சிகளிடம் பணம் வாங்கினார் என்றும் குறிப்பாக சசிகலாவிடம் கோடி கணக்கில் பணம் வாங்கினார் என்றும் அவரது கட்சியில் இருந்தவரே கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு சீமான் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva
 
About Writer
Siva