சனி, 14 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 2 செப்டம்பர் 2024 (09:46 IST)

விஜய்யுடன் கூட்டணி இல்ல.. சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி!

Seeman Vijay

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என சீமான் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த பல ஆண்டுகளாகவே உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல்களை தனியாகவே எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கும் முயற்சிகளை ஆரம்பித்தது முதலாகவே சீமான், விஜய்க்கு ஆதரவாக பேசி வந்தார்.

 

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன், நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைக்குமா என ஒருமுறை பத்திரிக்கையாளர்கள் கேட்டபோதும் “அதை தம்பி விஜய்தான் முடிவு செய்ய வேண்டும்” என பேசியிருந்தார். ஆனால் வழக்கம்போல சட்டமன்ற தேர்தலை தனித்து எதிர்கொள்ள நாம் தமிழர் கட்சி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
 

 

சமீபத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமானிடம், சட்டமன்ற தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி உண்டா என கேட்டபோது, 2026ம் ஆண்டு நாம் தமிழர் கட்சி தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாகவும், தற்போதே 60 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K