வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 29 மே 2019 (18:27 IST)

உலகமே பார்த்து காரித்துப்புது... தேர்தல் ஆணையம் முறையாக செயல்பட்டதா? சீமான் காட்டம்

இந்தியாவில் நடைமுறையில் உள்ள தேர்தல் முறையை உலகமே பார்த்து காரித்துப்புது என சீமான் விமர்சித்துள்ளார். 
 
இது குறித்து சீமான் பேசியது பின்வருமாறு, ஒரு பெட்டி கடை ஷட்டரை திறக்கும் போது 300 வாக்கு இயந்திரங்கள் இருக்கு. இதை உலகமே பார்த்து காரித்துப்புது. 
 
வாக்கு இயந்திரத்தை தயாரித்து கொடுக்கிற ஜப்பானே வாக்கு இயந்திர முறையை பின்பற்றவில்லை. என்னைக்கோ அதை கைவிட்டுட்டு, வாக்கு சீட்டு முறையை பின்பற்ற ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா இங்கே? 
 
நீட் தேர்வில் மூக்குத்தியை, தோடை கழட்டினாங்களே.. சின்ன மூக்குத்தியில் கூட பிட்டை கொண்டு செல்லமுடியும், காது தோட்டில் கூட பிட்டை கொண்டு செல்ல முடியும்னு சொன்னால், அதை என் நாடும் நம்புது. 
 
ஆனா அவ்வளவு பெரிய வாக்கு இயந்திரத்தில் ஒரு தப்பும் நடக்காதுன்னு சொல்றதை எப்படி நம்பறது? இது எந்த மாதிரியான கட்டமைப்பு? மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இந்த தேர்தல் முறையாக நடந்தததா? தேர்தல் முறைப்படி நடந்ததா? தேர்தல் ஆணையம் முறையாகத்தான் செயல்பட்டதா? என விமர்சனம் செய்துள்ளார்.