செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 25 மே 2019 (09:15 IST)

முதல்வர் வாக்குச்சாவடியில் திமுகவுக்கு அதிக ஓட்டா ? – வெளியானது உண்மை !

எடப்பாடி பழனிச்சாமியின் ஊரில் திமுக , அதிமுகவை விட அதிக வாக்குகள் பெற்றதாக நேற்று மதியம் சமூகவலைதளங்களில் தவறான செய்தி பரவியது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக ஒரு தொகுதியை தவிர அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொகுதியான சேலத்திலும் திமுகவே வெற்றி பெற்றது. மக்களவை தேர்தல் அன்று முதல்வர் அவரது எடப்பாடி தொகுதிக்குட்பட்ட சிலுவம்பாளையத்தில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார். இந்நிலையில் சிலுவம்பாளையம் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வை விட திமுக 800 வாக்குகள் அதிகம் பெற்றதாக் செய்திகள் நேற்று வெளியாகின.

இதனால் அதிமுக தொண்டர்கள் அதிருப்தியடைந்தனர். ஆனால் உண்மையில்  அந்த வாக்குச்சாவடியில் மொத்தமே 900 வாக்குகள் பதிவானதாகவும் அதில் அதிமுக 679 வாக்குகள் பெற்றதாகவும் திமுக 221 வாக்குகள் பெற்றதாகவும் உணமைத் தகவல் இப்போது வெளியாகியுள்ளது.