செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 28 மே 2019 (10:58 IST)

பாஜக வேணாம்னு சொன்னது நாங்க.. ஆனா ஜெயிச்சது திமுக…? – சீமான் பதில் !

பாஜக வேண்டாம் என்று முதலில் சொன்னது நாங்கள்தான் என்றும் ஆனால் அதை அறுவடை செய்தது திமுக எனவும் சீமான் கூறியுள்ளார்.

நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி எந்தவொருத் தொகுதியிலும் வெற்றியினைப் பெறவில்லை என்றாலும் பல இடங்களில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. இது குறித்து மதுரையில் விமான நிலையத்தில் சீமானிடம் கேள்வி கேடகபட்டது.

அப்போது ‘ பாஜக வரக்கூடாது என்ற வாதத்தை முதலில் வைத்ததே நாங்கள் தான். ஆனால் அறுவடையை திமுக செய்துள்ளது. வாக்குக்குக் காசு கொடுக்கவில்லை என சொல்ல சொல்லுங்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ வசந்தகுமார் இப்போது எம்.பி. ஆகிவிட்டார். அதனால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறார். இப்போது அந்த தேர்தல் செலவை யார் ஏற்பது ?50 வருஷமா நடிச்ச நடிகர் இப்போது அரசியலுக்கு வந்திருக்கிறார் என்றுதான் மக்கள் நம்பி அவருக்கு வாக்களித்துள்ளனர். சீமானுக்கு ஓட்டுப்போட்டா பாஜக வந்துடும் என வீடு வீடாக சென்று திமுகவினர் பேசியுள்ளனர். ’ எனக் கூறியுள்ளார்.