புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 24 மே 2019 (16:08 IST)

எடப்பாடி பழனிசாமி ஊரில் 800 வாக்குகள் அதிகம் பெற்ற திமுக

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்த ஊரில் திமுக 800 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக ஒரு தொகுதியை தவிர அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொகுதியான சேலத்திலும் திமுகவே வெற்றி பெற்றது.

மக்களவை தேர்தல் அன்று முதல்வர் அவரது எடப்பாடி தொகுதிக்குட்பட்ட சிலுவம்பாளையத்தில் மக்களோடு மக்களாக வரிசயில் நின்று வாக்களித்தது அப்போது பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் சிலுவம்பாளையம் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வை விட திமுக 800 வாக்குகள் அதிகம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. முதல்வர் தொகுதியிலேயே இப்படி ஆகிவிட்டதே என அதிமுக தொண்டர்கள் அப்செட்டாக இருக்கின்றனர்.