அமைச்சரவையை கலைக்க போகிறாரா மோடி?

modi
Last Modified வெள்ளி, 24 மே 2019 (17:45 IST)
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பெற்றதையடுத்து பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. தற்போது நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து பாஜக தலைமை முடிவெடுக்க உள்ளது.

இந்நிலையில் மீண்டும் பிரதமராக மோடியே தொடர்வாரா என்பது பற்றியும் அமைச்சரவையில் முடிவெடுக்கப்படும். மே 26 பதவியேற்பு குறித்து குடியரசு தலைவரை சந்திக்க இருக்கிறார்கள். தற்போதைய மக்களவையை கலைத்துவிட்டு மீண்டும் புதிய அவையை கூட்ட வேண்டியிருப்பதால், அதுகுறித்தும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். யார் யாருக்கு என்னென்ன அமைச்சர் பதவிகள் போன்றவற்றை முடிவு செய்து கொண்டு குடியரசு தலைவரை சந்திக்க இருக்கிறார்கள்.இதில் மேலும் படிக்கவும் :