1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Secret room in sushil hari school

சிவசங்கர் பாபா பள்ளியில் ரகசிய சொகுசு அறை: போலீஸார் கண்டுபிடிப்பு!

சிவசங்கர் பாபா
சிவசங்கர் பாபாவின் பள்ளி அறையில் ரகசிய சொகுசு அறை ஒன்று இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சிவசங்கர் பாபா நடத்திவரும் சுஷில் ஹரி பள்ளியில் மாணவிகள் பாலியல் அத்துமீறலுக்கு உட்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் சிவசங்கர் பாபாவின் பள்ளியில் ரகசிய அறை இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்த நிலையில் இது குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் பள்ளியில் ரகசிய அறை ஒன்று இருப்பது குறித்து தெரியாது என கூறியதாக தெரிகிறது 
 
இந்த நிலையில் சிவசங்கர் பாபாவிடம் இதுகுறித்து நடத்திய விசாரணையில் அவர் ரகசிய சொகுசு அறை இருப்பதை ஒப்புக்கொண்டார். சிறைக்கு செல்வதற்கு முன் காவல்துறையினர்களின் வாகனத்தில் இருந்து கொண்டே அவர் ரகசிய அறைக்கு செல்லும் வழியை கூறியதாக தெரிகிறது இதனை அடுத்து அந்த ரகசிய அறையை காவல்துறையினர் ஆய்வு செய்து வருவதாகவும் அதில் பல தடயங்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
அடுத்த கட்டுரையில்
மூன்று மாநிலங்களில் நிலநடுக்கம்: பரபரப்பு தகவல்