1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Schools should not open today District collector Warning

லீவ் விடாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

பள்ளி விடுமுறை
சென்னையில் உத்தரவை மீறி இன்று திறக்கப்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
சென்னையின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் தற்போது வரை நல்ல மழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்து வரும் மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 
 
எனவே சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து  சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 
 
ஆனால் ஆட்சியரின் உத்தரவையும் மீறி சென்னையில் சில பள்ளிகள் வழக்கம்போல் இயங்குவதாக புகார் கூறப்பட்டது. 
 
இதனையடுத்து இது குறித்து பேசிய ஆட்சியர் உத்தரவை மீறி இயங்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மழையில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு எதாவது ஆனால் பள்ளி நிர்வாகம் தான் பதில் கூற வேண்டும் என எச்சரித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
நாங்க குறைச்சுட்டோம், நீங்க எப்போ குறைப்பீங்க? தமிழக அரசுக்கு தமிழிசை கேள்வி