வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: சனி, 29 செப்டம்பர் 2018 (10:56 IST)

என்னைப் பார்த்து கேவலமாக சிரிப்பதா? கீர்த்தி சுரேசை எச்சரித்த ஸ்ரீரெட்டி!

ஸ்ரீரெட்டி பற்றி விஷால் பேசியதை கேட்டு அருகில் இருந்த கீர்த்தி சுரேஷ் சிரித்ததாக கூறப்படுகிறது. இந்த சிரிப்பை பார்த்து ஸ்ரீரெட்டியை கடும் ஆத்திரத்தில் உள்ளார்.

சண்டக்கோழி–2 பட விழா கடந்த 24ம் தேதி நடந்தது. விழாவில் விஷால், கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘‘ தமிழ் படத்தில் நடிக்கிற வாய்ப்பு ஶ்ரீரெட்டிக்கு கிடைத்ததை வரவேற்க வேண்டிய விஷயம்.. இந்த படத்தில் நடிக்கிறப்ப எல்லோருமே உஷாராக இருப்பாங்க. ஶ்ரீரெட்டி தனது பாதுகாப்புக்கு எல்லா இடத்திலும் கேமரா வைச்சிருப்பார்’’ என்றார்.

ஸ்ரீரெட்டி பற்றி விஷால் பேசியதை கேட்டு அருகில் இருந்த கீர்த்தி சுரேஷ் சிரித்ததாக கூறப்படுகிறது. இந்த சிரிப்பு ஸ்ரீரெட்டியை கோபப்படுத்தி உள்ளது.

கீர்த்தி சுரேசை தனது முகநூல் பக்கத்தில் ஸ்ரீரெட்டி கடுமையாக விமர்சித்துள்ளார். ‘‘கீர்த்தி சுரேஷ் சிரிப்பு மிகவும் கேவலமாக இருந்தது கவலைப்படாதீர்கள் மேடம். நீங்கள் எப்போதும் உயர்ந்த இடத்தில் இருக்க முடியாது. ஒரு நாள் போராடுபவர்கள் வலியை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் சிரித்ததை நான் மறக்க மாட்டேன். நினைவு வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள்’’ என்று ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.