செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 5 அக்டோபர் 2018 (08:44 IST)

நாங்க குறைச்சுட்டோம், நீங்க எப்போ குறைப்பீங்க? தமிழக அரசுக்கு தமிழிசை கேள்வி

பெட்ரோல் டீசல் விலை மீதான வரியை குறைத்துள்ளதாக நேற்று மத்திய நிதி அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக பெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இதற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களாக சொல்ல்ப்பட்டன.
 
ஆனாலும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்காமல் மத்திய அரசும், மாநில அரசும் மாறி மாறி குறை கூறிக் கொண்டு வந்தன.
 
இந்நிலையில் நேற்று பிரதமரை சந்தித்த பின் பேசிய நிதியமைச்சர் பெட்ரோல், டீசல் விலையில் 2.50 ரூபாய் குறைத்திருப்பதாக கூறினார். மேலும் மாநில அரசுகளும் பெட்ரோல் மீதான வாட் வரியைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என பேசினார்.
இதுகுறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு ரூ.2.50 குறைத்துள்ளது. அதேபோல் தமிழக அரசும் பெட்ரோல் டீசல் மீதான வரியை எப்பொழுது குறைக்கப்போகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். வரியை குறைத்து மக்களின் கஷ்டத்தைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தமிழிசை கோரிக்கை வைத்துள்ளார்.