குழந்தையை கொஞ்ச வந்த +2 மாணவி.. கர்ப்பமாக்கிய கட்டிட மேஸ்திரி! – கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி!
கிருஷ்ணகிரில் பள்ளி படிக்கும் சிறுமியை கட்டிட மேஸ்திரி வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள மூங்கிலேரி கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ். கட்டிட மேஸ்திரியாக வேலை பார்க்கும் காளிதாஸுக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. காளிதாஸ் வீட்டிற்கு அருகில் 16 வயதான ப்ளஸ் டூ படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வந்துள்ளார்.
காளிதாஸின் குழந்தையை கொஞ்சி விளையாடுவதற்காக அடிக்கடி அவர் காளிதாஸ் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்படியாக ஒரு தடவை மாணவி சென்றபோது வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்திக் கொண்டு மாணவியை கட்டாயப்படுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் காளிதாஸ்.
மேலும் இதுகுறித்து யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன மாணவி யாரிடமும் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார். சமீபமாக சிறுமியின் உடல் நிலையில் மாற்றங்கள் தென்பட்ட நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் அவரை மருத்துவமனை அழைத்து சென்றுள்ளனர். அப்போதுதான் அவர் 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
இறுதியாக மாணவி நடந்ததை பெற்றோரிடம் சொல்ல இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீஸார் காளிதாஸை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K