திங்கள், 15 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 29 பிப்ரவரி 2024 (09:09 IST)

ஐ பெரியசாமியை அடுத்து தங்கம் தென்னரசு.. இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை..!

thangam thennarasu
அமைச்சர் ஐ பெரியசாமி குறித்த வழக்கின் தீர்ப்பு அதிரடியாக நேற்று வெளியான நிலையில் அடுத்த கட்டமாக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவியை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து எடுத்துக் கொண்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

அமைச்சர் தங்கம் தென்னரசு மனைவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏற்கனவே தனது வாதத்தை முன்வைத்துவிட்ட நிலையில் இன்று இந்த வழக்கில் அரசு தரப்பு வாதம் தொடர உள்ளதாகவும் இன்றைய விசாரணையின் போது கூடுதல் ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் தானாகவே முன்வந்து இந்த வழக்கை மீண்டும் கையில் எடுத்துள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ பெரியசாமி வழக்கை போலவே இந்த வழக்கில் கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு மீண்டும் விசாரணை தொடங்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva