1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 29 பிப்ரவரி 2024 (07:51 IST)

ஒரே மகனை இழந்த 58 வயது பெண் கருத்தரிப்பு.. பிரபல பாடகரின் பெற்றோர் முடிவு..!

பஞ்சாபை சேர்ந்த பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் ஒரே மகனை இழந்த அவரது பெற்றோர் மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பிரபல பாடகர் சித்து முஸ்வாலா கடந்த 2022 ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து ஒரே மகனை இழந்து அவரது பெற்றோர் மிகுந்த வருத்தத்தில் இருந்த நிலையில் தற்போது அவர்கள் மீண்டும் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.

ஆனால் சித்து மூஸ்வாலா தாயாருக்கு 58 வயது ஆகிவிட்டதை அடுத்து செயற்கை முறையில் கருத்தரித்து கொள்ள அவர்கள் முடிவு செய்ததாகவும் தற்போது அந்த பெண்  கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சித்து மூஸ்வாலா பெற்றோர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட போதிலும் அவர்களது உறவினர் ஒருவர் இந்த தகவலை உறுதி செய்து உள்ளார். சித்து மூஸ்வாலா தாயார் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் ஆனால் அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்றும் வயதான காலத்தில் செயற்கை கருத்தரித்தல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் இருப்பினும் 20% மட்டுமே சாத்தியம் என்பதால் இப்போதைக்கு இந்த தகவலை வெளியே சொல்ல அவர்கள் விரும்பவில்லை என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

 ஒரே மகனை இழந்த சித்து மூஸ்வாலா பெற்றோருக்கு இன்னொரு குழந்தை கிடைக்குமா என்பது இன்னும் சில மாதங்கள் கழித்து தெரிய வரும்.

Edited by Siva