வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 22 பிப்ரவரி 2024 (11:32 IST)

17 முறை கர்ப்பமானதாக நாடகம்.. ஒரு குழந்தை கூட பெற்று கொள்ளாத பெண்ணிற்கு ஜெயில்..!

17 முறை கர்ப்பமானதாக நாடகம் ஆடி அரசு சலுகைகள் மற்றும் விடுமுறைகள் பெற்று ஜாலியாக இருந்த பெண் ஒருவருக்கு ஒரு ஆண்டுக்கும் மேல் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் அரசு வேலை செய்து வரும் நிலையில் அவர் கடந்த 24 ஆண்டுகளில் 17 முறை கர்ப்பமானதாக தகுந்த ஆவணங்களை காட்டி விடுமுறை மற்றும் அரசு சலுகைகளை பெற்றுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் அவர் இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடி ரூபாய் அரசு சலுகை பெற்றதாகவும் பல மாதங்கள் மகப்பேறு விடுமுறை பெற்றதாகவும் தெரிகிறது. ஆனால் உண்மையில் இந்த பெண்ணுக்கு இன்னும் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்களிடம் தனக்கு ஐந்து குழந்தைகள் இருப்பதாகவும் மற்ற குழந்தைகள் அபார்ஷன் ஆகிவிட்டதாகவும் கூறி நடித்துள்ளார் இந்நிலையில் சமீபத்தில் மீண்டும் அவர் கர்ப்பமானதாக கூறிய சலுகைகள் பெற முயன்ற போதுதான் உயர் அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்துள்ளது

இதையடுத்து அவரை கண்காணித்த போது அவருக்கு இதுவரை குழந்தையே பிறக்கவில்லை என்பது நிரூபணம் ஆனது.  இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஒரு ஆண்டு ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்

Edited by Mahendran