1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. School leave announced in 2 districts

பள்ளிகளுக்கு மதியத்துக்கு மேல் விடுமுறை - எங்கு தெரியுமா?

Weather
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் இன்று கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. 

 
இந்த நிலையில் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 
ஏற்கனவே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் ஐந்து மாவட்டங்களில் கூடுதலாக கனமழை பெய்யும் என்ற அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது மழையின் காரணமாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மதியத்துக்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
About Writer
Sugapriya Prakash