1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Formation of depression will be delayed

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதில் மேலும் தாமதம்

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது தாமதமாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முன்னதாக காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி கரையை கடந்த நிலையில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
 
இந்நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதில் மேலும் தாமதம் நீடிக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தெற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு கிழக்கில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 4.5 கி.மீ. உயரத்துக்கு நீடிக்கிறது. 
 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தாழ்வாக உள்ளதால் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இதுவரை உருவாகவில்லை.  குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் உருவாக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட்.... விரைவில் இந்தியாவில்!!