1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 25 நவம்பர் 2021 (12:40 IST)

இன்னும் சிலமணி நேரங்களில் 5 மாவட்டங்களில் மிக பலத்த மழை!

இன்னும் சில மணி நேரங்களில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் இன்று கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
 
ஏற்கனவே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் ஐந்து மாவட்டங்களில் கூடுதலாக கனமழை பெய்யும் என்ற அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.