வியாழன், 8 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (15:00 IST)

கனமழை எதிரொலி: புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை எதிரொலி: புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாக திடீரென மழை பெய்து வருகிறது. குறிப்பாக பிப்ரவரி மாதத்தில் தமிழகத்திலும், புதுவையிலும் மழை பெய்து வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் புதுவை மாநிலத்தில் கனமழை பெய்து வருவதன் காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என மாநில பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
 
தொடர்மழை காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை ஒருநாள் விடுமுறை என புதுச்சேரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. நாளை மறுநாள் எப்பொழுதும் போல் பள்ளிகள் இயங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது