1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. We will defeat the BJP plan - Puducherry CM Narayanasamy

பாஜகவின் ஆட்சிக்கவிழ்ப்பு திட்டத்தை முறியடிப்போம்: புதுவை முதல்வர் நாராயணசாமி

புதுவை
புதுவை மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 4 பேர் சமீபத்தில் திடீரென ராஜினாமா செய்த நிலையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு பெரும்பான்மை இழந்து விட்டதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் நேற்று புதுவை மாநில துணை நிலை ஆளுநர் ஆக பதவி ஏற்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் வரும் 22ஆம் தேதி 5 மணிக்குள் முதல்வர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்/ இந்த உத்தரவை அடுத்து புதுவை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் இது குறித்து பேட்டியளித்த முதல்வர் நாராயணசாமி அவர்கள் எம்எல்ஏக்களை மிரட்டியும் விலைக்கு வாங்கியும் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி செய்கிறது என்றும் பாஜகவின் இந்த திட்டத்தை முறியடிப்போம் என்றும் கூறியுள்ளார். மற்ற மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்த்தது போல் புதுவையில் பாஜக எங்களுடைய ஆட்சியை கவிழ்க்க முடியாது என்று முதல்வர் நாராயணசாமி மேலும் கூறியுள்ளார். அவருடைய இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
இன்று பெட்ரோலை விட அதிகமாக உயர்ந்த டீசல் விலை: பொதுமக்கள் அதிருப்தி!