1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Puducherry heavy rain schools in holiday

புதுச்சேரியை அச்சுறுத்தும் மழை! – தொடர்மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை!

Tamilnadu
புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பருவமழை காலம் முடிந்துவிட்ட நிலையில் வெப்பசுழற்சி காரணமாக சில பகுதிகளில் மிதமான அளவில் மழைபெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முதலாக கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடலூர் நகரில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் கடலூர், புதுச்சேரி பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பேகம் என்ற பெண் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
உத்தராகண்ட் பனிச்சரிவு, வெள்ளம்: இமய மலையில் உள்ள அணுசக்தி உளவு கருவிகள் காரணமா?