வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 18 பிப்ரவரி 2021 (18:48 IST)

புதுவையில் பழிவாங்கும் நடவடிக்கையா? என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி விளக்கம்

புதுவை முதல்வர் நாராயணசாமி வரும் 22ஆம் தேதிக்குள் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என புதுவை மாநில துணை நிலை ஆளுநர் ஆக இன்று காலை பொறுப்பேற்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சற்று முன் உத்தரவு பிறப்பித்தார் என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என ஆளும் காங்கிரஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதற்கு பதிலடி தரும் வகையில் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கூறியபோது ’புதுச்சேரி அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் இது எப்படி பழிவாங்கும் நடவடிக்கை என்று கூற முடியும்? என்று கூறியுள்ளார் 
 
மேலும் நியமன உறுப்பினர் 3 பேருக்கு வாக்குரிமை இல்லை என ஆளுங்கட்சியினர் கூறியதற்கு பதில் கூறிய ரங்கசாமி நியமன உறுப்பினர்களுக்கு வாக்குரிமை இல்லை என ஆளும் கட்சி எப்படி சொல்ல முடியும்? அதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை என்று தெரிவித்தார்