1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (09:01 IST)

பெரும்பான்மையை நிரூபிக்க தமிழிசை உத்தரவு: என்ன செய்ய போகிறார் நாராயணசாமி?

புதுச்சேரி சட்டப்பேரவையில் நாராயணசாமி தலைமையிலான அரசு வரும் 22 ஆம் தேதி  பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
 
புதுவையில் கடந்த கடந்த சில ஆண்டுகளாக முதல் அமைச்சர் நாராயணசாமி மற்றும் கவர்னர் கிரண்பேடி ஆகிய இருவருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது என்பதும் இருவரும் மாறிமாறி விமர்சனம் செய்து கொண்டிருந்தனர் என்பதும் தெரிந்ததே.  
 
இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் திடீரென ராஜினாமா செய்ததையடுத்து புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து கிரண் பேடி ஆளுநர் பதவ்யில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார். 
 
இதனிடையே புதுச்சேரி சட்டப்பேரவையில் நாராயணசாமி தலைமையிலான அரசு வரும் 22 ஆம் தேதி (திங்கட்கிழமை) பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.