1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Scholarship Application Deadline Announced for Backward Classes Students in UG, PG Vocational Courses

இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

கல்வி உதவித்தொகை
திருவள்ளூர் மாவட்டத்தில், இளங்கலை மற்றும் முதுகலை தொழிற்கல்வி படிப்புகளை பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் நடப்பு கல்வி ஆண்டிற்கான மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெறலாம். இந்த உதவித்தொகை மத்திய அரசின் திட்டத்தின் கீழ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறையால் வழங்கப்படுகிறது.
 
தகுதிகள்: அரசு, அரசு உதவி பெறும் நிறுவனங்கள் அல்லது தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயில்வோர்.
 
இளங்கலை, முதுகலை, பாலிடெக்னிக் போன்ற தொழிற்படிப்புகளுக்கு விண்ணப்பிப்போர் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். (அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்போருக்கு வருமான உச்சவரம்பு இல்லை.)
 
மாணவர்கள் தங்கள் கல்லூரியில் உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி, https://umis.tn.gov.in என்ற இணையதளம் வழியாக டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சந்தேகங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம்.
 
 
Edited by Mahendran
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
காத்திருந்து.. காத்திருந்து.. புதினை சந்திக்க முடியாமல் பொறுமையிழந்த பாகிஸ்தான் பிரதமர்!...