1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. SBI ATM robbery gang leader arrested

எஸ்.பி.ஐ ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் கைது !

ஏடிம் கொள்ளை
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள எஸ்பிஐ வங்கிகளில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் நூதனமான முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட அமீர் மற்றும் வீரேந்தர் , நசீர்ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளையின்போது,  தமிழகம் வந்து பைக் ஓட்டினால் ரூபாய் 1 லட்சம் தருவதாக அமீர் அர்ஷ் கூறியதாக வீரேந்தர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். மேலும்  ஏ.டி.எம்.-களில் பணம் கொள்ளையடித்து விட்டு தப்பி செல்ல பைக் ஓட்ட உதவியதாக வீரேந்தர் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், சென்னை ஸ்டேட் வங்கி ஏடிஎம்-ல் இயந்திரங்களை கொள்ளையடித்த கும்பலின் தலைவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.  மேலும், கொள்ளை கும்பல் தலைவனை நாளை சென்னை அழைத்து வரவுள்ளதாகவும், இவர் ஏற்கனவே மத்திரபிரதேசம், புதுச்சேரி, உத்தரபிரதேசத்தில்  கைவரிசை காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
சசிகலாவின் ஆடியோவுக்கு ஆர்.பி.உதயகுமார் பதில்