புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் 30 பேர்களுக்கு தொடர்பு: விசாரணை தீவிரம்!

தமிழகத்தையே உலுக்கி வரும் ஏடிஎம் கொள்ளையில் மேலும் ஒரு கொள்ளையன் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களில் நூதனமான கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்
 
டெல்லி மற்றும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான் கொள்ளையர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தனிப்படை போலீசார் இரண்டு மாநிலங்களுக்கும் சென்று தேடிய நிலையில் அமீர் என்பவரை கைது செய்தனர். அதன் பின் தற்போது மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர் 
 
இந்த இருவரிடமும் விசாரணை செய்தபோது இந்த ஏடிஎம் கொள்ளையில் மொத்தம் இரண்டு குழுக்கள் செயல்பட்டு உள்ளது என்றும், அதில் சுமார் 30 பேர்கள் வரை கொள்ளையில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது. இதனையடுத்து கொள்ளையர்கள் அனைவரிஅயும் பிடிக்க ஹரியானா மாநில போலீஸ் உதவியுடன் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் ஒட்டுமொத்தமாக அனைத்து கொள்ளையர்களையும் பிடித்து விடுவோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்