திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 1 ஜூலை 2021 (12:45 IST)

பைக் ஓட்டவே வந்தேன்... ஏடிஎம் கொள்ளையன் வீரேந்தர் வாக்குமூலம்

ஏ.டி.எம்.-களில் பணம் கொள்ளையடித்து விட்டு தப்பி செல்ல பைக் ஓட்ட உதவியதாக வீரேந்தர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

 
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள எஸ்பிஐ வங்கிகளில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் நூதனமான முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட அமீர் மற்றும் வீரேந்தர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். 
 
இந்நிலையில், எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளையன் வீரேந்தரை பைக் ஓட்ட தமிழகம் அழைத்து வந்து ரூபாய் 1 லட்சம் சம்பளம் தந்துள்ளனர். தமிழகம் வந்து பைக் ஓட்டினால் ரூபாய் 1 லட்சம் தருவதாக அமீர் அர்ஷ் கூறியதாக வீரேந்தர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ஏ.டி.எம்.-களில் பணம் கொள்ளையடித்து விட்டு தப்பி செல்ல பைக் ஓட்ட உதவியதாக வீரேந்தர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.