தொடர்புடைய செய்திகள்
- தாயாரிடம் தினமும் சண்டையிட்ட 3 வது கணவர்.! கல்லால் அடித்து கொன்ற மகன்..!!
- சவுக்கு சங்கருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை.! போலீசார் கதவை உடைத்ததால் பரபரப்பு..!!
- சென்னைக்கு அழைத்து வரப்படும் சவுக்கு சங்கர்..எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்?
- லிங்க்கை க்ளிக் செய்தால் வேலைவாய்ப்பு.. மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் உள்பட 3 பேர் கைது..!
- சவுக்கு சங்கருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்துள்ளனர்
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு: 6வது வழக்கிலும் கைது
யூடியூபர் சவுக்கு சங்கர் ஏற்கனவே 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 6வது வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சி.எம்.டி.ஏ.வின் ஆவணங்களை போலியாக தயாரித்து அவதூறு பரப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மோசடி, போலி ஆவணங்கள் மூலம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் காவல்துறை அதிகாரிகளை சர்ச்சைக்குரிய வகையில் பேசியது, கஞ்சா வழக்கு மற்றும் சென்னை சைபர் கிரைம் போலீசார் ஏற்கனவே 2 வழக்குகள் பதிந்து கைது செய்துள்ள நிலையில், மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் ஏற்கனவே 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 6வது வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளதால் 6 வழக்கிலும் அவர் ஜாமின் பெற்றால் மட்டுமே வெளியே வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran
