வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 10 மே 2024 (14:18 IST)

தாயாரிடம் தினமும் சண்டையிட்ட 3 வது கணவர்.! கல்லால் அடித்து கொன்ற மகன்..!!

crime
திருச்சியில் தனது தாயாரிடம் தினமும் சண்டையிட்டு வந்த மூன்றாவது கணவரை,  கல்லால் சரமாரியாக அடித்து படுகொலை செய்த 17 வயது சிறுவன் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
 
திருச்சி கருவாட்டுப் பேட்டையைச் சேர்ந்தவர் பரணி என்கிற பரணி குமார். சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கோட்டை காவல் நிலையம், காந்தி மார்க்கெட் காவல் நிலையங்களில், திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.  இவருக்கும், திருச்சி கோட்டை ரயில் நிலையம் குட்ஷெட் பகுதியைச் சேர்ந்த மதன் என்பவருடைய மனைவி ஜோதி என்பவருக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
 
கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஜோதிக்கு,  பரணிக்குமார் 3வது கணவன் என்று கூறப்படுகிறது.  இந்நிலையில், வழக்கு ஒன்றில் சிறையில் இருந்த பரணிக்குமார், கடந்த மார்ச் மாதம் சிறையில் இருந்து திரும்பியுள்ளார். அன்று முதல், பரணிகுமாருக்கும், ஜோதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
 
வழக்கம்போல் இருவருக்கும் தகராறு ஏற்படவே  ஆத்திரமடைந்த பரணிக்குமார் ஜோதியை அடித்து, உதைத்துள்ளார். இதனைக் கண்ட ஜோதியின் 17 வயது மகன் மற்றும் அவனது நண்பன்  முகமது தெளபீக் ஆகிய இருவரும் சேர்ந்து, பரணி குமாரின் தலையில் கல்லால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.


மேலும், கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரணிக்குமார் துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கோட்டை காவல் நிலைய போலீசார், பரணி குமாரை கொலை செய்த இருவரையும் கைது செய்தனர்.