வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 10 அக்டோபர் 2017 (09:36 IST)

ஓ.எஸ். மணியனுடன் பேசிய சசிகலா? - நடந்தது என்ன?

பரோலில் இருந்து வெளியே வந்த சசிகலா அமைச்சர் ஓ.எஸ். மணியனுடன் தொலைப்பேசியில் பேசியதாக செய்திகள்  வெளிவந்துள்ளது.


 

 
உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவர் நடராஜனை சந்திக்க 5 நாட்கள் பரோலில் வந்துள்ளார் சசிகலா. 
 
பொதுக்குழுவில் சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக நியமித்தது செல்லாது என எடப்பாடி பழனிச்சாமி அணி அறிவித்து விட்டாலும், சசிகலாவிற்கு ஆதரவாக அவ்வப்போது சில அமைச்சர்கள் தொடர்ந்து கருத்து கூறியே வருகின்றனர்.  பரோலில் இருந்து சசிகலா வெளியே வந்தால், அவரை நேரில் சென்று சந்திப்பேன் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் சமீபத்தில் கருத்து தெரிவித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டென்ஷன் கொடுத்தார்.
 
அதேபோல், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு “ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அதிமுக ஆட்சி அமைய பாடுபட்டவர் சசிகலா. ஆனால், என்னுடை விருப்பு வெறுப்புகளை அடக்கிக்கொண்டு ஜெ.வின் பிள்ளையாக இருக்கிறேன் ” என ஒரு விழாவில் பேசியுள்ளார்.
 
எனவே, சசிகலாவிற்கு ஆதரவாக இருக்கும் சில அமைச்சர்களிடம் சசிகலா தொலைப்பேசியில் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. முக்கியமாக, அவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எடப்பாடியிடம் பேச சசிகலா தரப்பில் முயன்ற போது, அவர் தொலைபேசியை எடுக்கவில்லை என நேற்று செய்திகள் வெளியானது. 
 
இந்நிலையில், அமைச்சர் ஓ.எஸ். மணியனிடம் சசிகலா தொலைபேசியில் பேசினார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அவரிடம் பேசிய சசிகலா “ நீங்கள் இப்படி செய்யலாமா?” என ஆரம்பிக்க, தன்னை கட்சியில் இருந்து நீக்கியது முதல், தினகரன் மீது பல குற்றச்சாட்டுகளை அவர் சசிகலாவிடம் ஓ.எஸ். மணியன் தெரிவித்தாராம். அதன்பின் அவரை சசிகலா சமாதானம் செய்ததாக தெரிகிறது.
 
அதன் பின் தினகரனை அழைத்து தி. நகர் இல்லத்தில் ஆலோனை செய்தாராம் சசிகலா. அதில், ஆட்சி கலையக் கூடாது. ஆனால், முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடியை அகற்ற வேண்டும். அதே நேரம் நம்மை நம்பி வந்த 18 எம்.எல்.ஏக்களுக்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்கிற ரீதியில் தினகரன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடம் தீவிர ஆலோசனை செய்தார் சசிகலா என செய்திகள் வெளியாகியுள்ளது.