லஞ்சம் வாங்கினால் செருப்பால் அடியுங்கள் - முதல்வர் பேச்சால் சர்ச்சை


Murugan| Last Updated: செவ்வாய், 10 அக்டோபர் 2017 (09:08 IST)
அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் பொதுமக்கள் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 
தெலுங்கானாவில் நடைபெற்ற சிங்கரேனி நிலக்கரி நிறுவனத்தின் தொழிலாளர்கள் சங்க தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி வெற்றி பெற்றதையொட்டி நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் சந்திரசேகர் ராவ் “சிங்கரேனி நிலக்கரி அமைப்பில் உடல் தகுதி பெற அதிகாரிகள் லஞ்சம் பெற்று வருகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதற்கு முன் எப்படியோ.. இனிமேல் அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் அவர்களை செருப்பால் அடியுங்கள். அரசு சம்பளம் கொடுக்கும் போது அவர்கள் ஏன் லஞ்சம் கேட்க வேண்டும்.  தொழிலாளர் பிரச்சனைகளில் சில தவறுகள் நடந்துவிட்டது. அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் அப்படி நடக்காது” என அவர் பேசினார்.
 
அவரின் இந்த பேச்சு தெலுங்கானா மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அதே நேரம் ஒரு முதல்வர் இப்படி பேசலாம என சர்ச்சையும் எழுந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :