டெங்குவை பரப்பிய 2000 கடைகளுக்கு நோட்டீஸ்
டெங்கு காய்ச்சல் கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் தலைவிரித்தாடி வரும் நிலையில் டெங்குவை கட்டுப்படுத்த தனியார் அமைப்புகளும் தமிழக அரசும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக டெங்கு கொசு அதிகம் உற்பத்தியாகும் இடங்களை கண்டறியும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது
இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் பரவ காரணமாக இருக்கும் கொசு உற்பத்தி ஆகும் பழைய பொருட்களை 2 நாட்களுக்குள் அகற்றாவிட்டால் 6 மாதம் சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. அதுமட்டுமின்றி இதுகுறித்து சென்னை முழுவதும் சுமார் 2000 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான பழைய டயர்களை உடனடியாக அகற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது