செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 10 அக்டோபர் 2017 (11:45 IST)

யாரை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்பது எனக்கு தெரியும்: திட்டம் வகுக்கும் சசிகலா!

யாரை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்பது எனக்கு தெரியும்: திட்டம் வகுக்கும் சசிகலா!

பரபரப்பான அரசியல் சூழலில் 5 நாட்கள் பரோலில் வந்துள்ள சசிகலா மீண்டும் தமிழக அரசியலை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வீட்டில் இருந்தபடியோ திட்டம் வகுப்பதாக தகவல்கள் வருகின்றன.


 
 
கணவரின் உடல்நிலையை காரணம் காட்டி பரோலில் வெளிவந்துள்ள சசிகலாவால் நிச்சயம் அரசியலில் சில மாறுதல்கள் வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்ககூடாதவாறு அவருக்கான நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இருந்தாலும் சசிகலா ஏதாவது ரகசியமாக செய்து அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறப்படுகிறது.
 
பரோலில் வந்துள்ள சசிகலா தனது குடும்ப உறவுகளுடன் பல்வேறு விஷயங்களை விவாதித்துள்ளார். அப்போது அரசியல் குறித்து பேசும்போது நீங்கள் வளர்த்துவிட்டவர்களே இன்று உங்களுக்கு எதிராக வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுகிறார்கள் என மன்னார்குடி உறவுகள் தங்கள் வருத்தத்தை சசிகலாவிடம் தெரிவித்துள்ளது.
 
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட சசிகலா, நான் பார்க்காத சோதனையா? நான் அம்மாவிடம் அரசியல் கற்றவள். பதவியில் இருந்தால் எப்படி நடந்துகொள்வார்கள், இல்லாதபோது எப்படி நடந்துகொள்வார்கள் என்பது எனக்கு தெரியும். யாரை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பதும் எனக்கு தெரியும். போகப் போகத்தான் என் அரசியல் காய் நகர்த்தல்களை பார்ப்பீர்கள் என சசிகலா குடும்ப உறவுகளிடம் உறுதியாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.