வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 22 டிசம்பர் 2022 (19:08 IST)

சசிகலா புஷ்பாவின் கார் மீது தாக்குதல்: அண்ணாமலை கண்டனம்!

sasikala
சசிகலா புஷ்பாவின் கார் மீது தாக்குதல் நடந்துள்ளதை அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
 
திமுகவின் அடக்குமுறைக்கு நாங்கள் அஞ்சோம்.  தொடர்ச்சியாக தமிழக பாஜகவின் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் திமுகவினரின் அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கின்றேன்.
 
அமைச்சர் கீதா ஜீவனின் தூண்டுதலின் பெயரில் தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் திருமதி சசிகலா புஷ்பா அவர்களின் வாகனம் மற்றும் இல்லத்தின் மீது கற்களைக் கொண்டு தாக்கிய திமுகவினரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும்
 
Edited by Siva