வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 21 டிசம்பர் 2022 (13:26 IST)

திடீரென டுவிட்டரில் டிரெண்ட் ஆகும் வாட்ச் விவகாரம்: நெட்டிசன்கள் கெத்து!

watch
சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த வாட்ச் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியதை அடுத்து பதிலடியாக திமுக குடும்பத்தில் உள்ளவர்களின் வாட்ச் குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 
 
கடந்த சில நாட்களாக வாட்ச் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது நெட்டிசன்கள் தங்கள் பங்குக்கு வாட்ச் ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 
 
இந்த ஆண்டு இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ள நிலையில் வாட்ச் ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. தங்களிடமுள்ள வாட்ச் என்ன? அதன் விலை என்ன? என்பது குறித்து பதிவு செய்து நெட்டிசன்கள் கெத்து காட்டி வருகின்றனர்
 
மேலும் உங்கள் கையில் கட்டியிருக்கும் வாட்ச் அந்தஸ்தை குறிக்கவா?  தேசபக்தியை காட்டவா? அல்லது நேரத்தை தெரிந்து கொள்ளவா? என்பது குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
செல்போன் பயன்பாடு அதிகமாகிவிட்டதை அடுத்து தற்போது வாட்ச் கட்டுவதையே பலர் கைவிட்ட நிலையில் திடீரென அண்ணாமலையால் வாட்ச் விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran