வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 21 டிசம்பர் 2022 (11:03 IST)

அண்ணாமலை எதை வெளியிட்டாலும் சந்திக்க தயார்: அமைச்சர் சேகர் பாபு!

Sekhar
அண்ணாமலை எந்த ஆதாரத்தை வெளியிட்டாலும் அதை சந்திக்க தயார் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட இருப்பதாகவும் அவரது சொத்து பட்டியல் 2 லட்சம் கோடியை தாண்டி விட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் அமைச்சர்கள் பற்றி அண்ணாமலை எதை வேண்டுமானாலும் வெளியிடும் என்றும் அதை எதிர்கொள்ள தயார் என்றும் தெரிவித்துள்ளார். 
 
மேலும் தமிழகத்தில் லஞ்ச லாவண்யம் இல்லாத ஆட்சியை திமுக நடத்தி வருகிறது என்றும் அவர் கூறினார்
 
Edited by Siva