வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 டிசம்பர் 2022 (18:35 IST)

பூனைக்கு மணிகட்டும் நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை ஆவேச பேச்சு

Annamalai
பூனைக்கு மணி கட்டும் நேரம் வந்துவிட்டது என்றும் என்னுடைய சொத்து மதிப்பு மட்டுமின்றி முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் திமுக அமைச்சர்கள் ஆகியோரின் சொத்து மதிப்பையும் வெளியிடுவேன் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த 50 ஆண்டுகளாக அரசியல்வாதிகளின் சொத்துக்களை யாருமே கேள்வி கேட்டால் இல்லை என்ற நிலையில் நாங்கள் முதன் முறையாக கேட்கப் போகிறோம் என்றும் கூறினார்
 
மேலும் முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் திமுக அமைச்சர்கள் ஆகியோர் சொத்து பட்டியலை நான் ஏப்ரல் மாதம் வெளியிட போகிறேன் என்றும் அதற்கான விபரங்கள் திரட்டும் பணி தொடங்கிவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
திமுக மற்றும் அவரது குடும்பத்தினர் அமைச்சர்களின் சொத்துக்கள் மட்டும் 2 லட்சம் கோடி உள்ளது என்றும் திமுக அமைச்சர் ஒருவருக்கு இந்தோனேசியாவில் சொந்த துறைமுகம் உள்ளது என்றும் அண்ணாமலை கூறியுள்ளார் 
 
அண்ணாமலையின் ஒரே ஒரு வாட்ச் குறித்து திமுக அமைச்சர் கேள்வி கேட்ட நிலையில் தற்போது ஒட்டுமொத்த அதிமுக அமைச்சர்களின் சொத்துக்களை வெளியிடுவேன் என்று அண்ணாமலை சொல்லி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran