1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sasikala dont want transfer to chenani prision

சென்னை சிறை வேண்டாம் ; மறுத்த சசிகலா : பின்னணி என்ன?

Sasikala
தமிழக சிறைக்கு தன்னை மாற்ற வேண்டாம் என அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட தண்டனை பெற்று சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் தற்போது பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
அவரை அவ்வப்போது டிடிவி தினகரன், அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், வழக்கறிஞர்கள் மற்றும் உறவினர்கள் பெங்களூர் சென்று அவரை சந்தித்து பேசி வருகின்றனர்.
 
இது மிகவும் சிரமாக இருப்பதால், அவரை சென்னை புழல் சிறைக்கு மாற்றும் வேலையில் தமிழக அரசு இறங்கியது. இதுகுறித்து அவரிடம் விவாதிக்கப்பட்டதாம். ஆனால், தன்னை சென்னைக்கு மாற்றினால், தவறாக பேசுவார்கள். மன்னார் குடி குடும்பத்தினர் மீது புகார்கள் வரும். எனவே, சென்னை சிறைக்கு தன்னை மாற்ற வேண்டாம் என சசிகலா கூறிவிட்டாராம்.
 
மேலும், சிறையிலிருந்து தன்னை நிரந்தரமாக விடுதலை செய்யும் வேலையை பாருங்கள் என முடுக்கிவிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் வெடித்து 120 பேர் பலி!!