பாவனா வழக்கில் திருப்பம் ; நடிகை திலீப்பிடம் பணம் கேட்டு மிரட்டல் கடிதம்


Murugan| Last Modified ஞாயிறு, 25 ஜூன் 2017 (14:08 IST)
நடிகை பாவனா வழக்கில் திடீர் திருப்பமாக, முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில், நடிகர் திலீப்பிடம் பணம் கேட்டு மிரட்டல் கடிதம் எழுதியுள்ளது கேரளா சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம், படப்பிடிப்பை முடித்துவிட்டு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்தி சென்று 2 மணி நேரத்திற்கும் மேல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் மலையாள திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பாவனாவிடம் ஏற்கனவே கார் ஒட்டுனராக பணிபுரிந்த பல்சர் சுனில் இதில் முக்கிய மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. எனவே, அவரோடு மற்றும் சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
மேலும், இந்த வழக்கில், நடிகர் திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாக அப்போதே செய்திகள் வெளியானது. ஆனால், அவர் அதை மறுத்தார்.  ஊடகங்கள் தன் மீது தவறாக பழி போடுவதாகவும், போலீசாரின் விசாரணை சரியான பாதையில் செல்வதாகவும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், சிறையில் இருக்கும் பல்சர் சுனில், அவரின் நண்பர் ஒருவர் மூலம் தன்னிடம் ஒன்றரை கோடி பணம் கேட்டு மிரட்டுவாதாகவும், இது தொடர்பாக பல்சர் சுனில் தனக்கு ஒரு கடிதமும் அனுப்பியிருப்பதாகவும் நடிகர் திலீப் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதோடு, சுனில் எழுதிய கடிதமும் வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு தற்போது சூடு பிடித்துள்ளது.
 
போலீசாரின் விசாரணையில் இன்னும் சிலர் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :