தொடர்புடைய செய்திகள்
- பிளஸ் 1 வகுப்பில் ஃபெயிலா? கவலை வேண்டாம்! பிளஸ் 2 படிக்கலாம்
- இணைப்பில் திடீர் சிக்கல்: கலைந்து சென்ற அமைச்சர்கள்
- எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ஒன்றிணையும் அதிமுக அணிகள்
- முடிவிற்கு வந்த ஓபிஎஸ் - எடப்பாடி மோதல் ; இரு அணிகளும் இணைகிறது?
- எடப்பாடியை சுற்றி ஸ்லீப்பர் செல்களை வைத்திருக்கும் தினகரன்: ஆபரேஷன் ஆரம்பம்!
கண்ணீருடன் பிறந்தநாள் விழா: சிறையில் சசிகலாவை தேற்றிய தினகரன்!
கண்ணீருடன் பிறந்தநாள் விழா: சிறையில் சசிகலாவை தேற்றிய தினகரன்!
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு நேற்று பிறந்தநாள். இதனையடுத்து நேற்று அவரை சந்திக்க தினகரன், அவரது மனைவி அனுராதா மற்றும் அவரது மகள், விவேக், அவரது மனைவி கீர்த்தனா ஆகியோர் சென்றனர்.
முதலில் சசிகலாவை தினகரன் குடும்பம் சந்தித்துள்ளது. சசிகலாவுக்கு முதலில் பிறந்தநாள் வாழ்த்து சொன்னது தினகரனின் மகள். இதனையடுத்து தினகரனை சசிகலா பார்த்ததும் அழுகயை கட்டுப்படுத்த முடியாமல் அழுதுள்ளார்.
நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க, எல்லாம் நல்லதே நடக்கும் என தினகரன் ஆறுதல் கூறியுள்ளார். அதன் பின்னர் சசிகலா தினகரனின் மகளைக் கட்டிப்பிடித்துப் பாசத்தைக் கொட்டியுள்ளார். அதன் பின்னர் விவேக்கின் மனைவி கீர்த்தனா சசிகலாவுக்கு வாழ்த்து சொல்லிய போது குடும்பமே கண்கலங்கியுள்ளது.
விவேக், கீர்த்தனா திருமணத்தை சசிகலா முன்னின்று நடத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த எமோஷனல் டிராமா எல்லாம் முடிந்த பின்னர் விவேக்குடனும் தினகரனுடனும் சசிகலா நீண்ட நேரம் ஆலோசனை செய்துள்ளார்.
