திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : சனி, 19 ஆகஸ்ட் 2017 (09:59 IST)

முதல்வரை கொல்பவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு: ஃபேஸ்புக்கில் மிரட்டல்!

முதல்வரை கொல்பவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு: ஃபேஸ்புக்கில் மிரட்டல்!

திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்காருக்கு  மர்ம நபர் ஒருவர் ஃபேஸ்புக்கில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவரை கொலை செய்பவர்களுக்கு பரிசு வழங்குவதாக அறிவித்த அந்த மர்ம ஆசாமியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


 
 
திரிபுரா மாநில முதல்வராக இருப்பவர் மாணிக் சர்க்கார். இவருக்கு நேற்று காலை ஃபேஸ்புக்கில் கொலை மிரட்டல் ஒன்று வந்துள்ளதை அடுத்து அகர்தலா போலீசார் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
முதல்வர் மாணிக் சர்க்காரை கொல்பவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என உலக ஆண்ட்டி கம்யூனிஸ்ட் கவுன்சில் என்ற அமைப்பின் பெயரில் ரியா ராய் என்பவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்துள்ளார். இதனையடுத்து போலீசார் இதுகுறித்து விசாரித்ததில் அது போலி பெயரில் உருவாக்கப்பட்ட ஃபேஸ்புக் ஐடி என்பது தெரியவந்தது. இதனையடுத்து முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த அந்த மர்ம ஆசாமியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.