எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ஒன்றிணையும் அதிமுக அணிகள்
திருவாரூரில் நாளை நடைப்பெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கலந்துக்கொள்கின்றனர்.
அதிமுக மூன்று அணிகளாக பிரிந்துள்ள நிலையில் ஓபிஎஸ் அணியும், எடப்பாடி பழனிச்சமி ஆணியும் இணைய அதிக அளவில் வாய்ப்புள்ளது. நேற்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது இரு அணிகளும் ஒன்றுசேர பேர்ச்சுவார்த்தை நடைப்பெற்று கொண்டிருக்கிறது.
இரு அணிகளும் ஒன்று சேர்ந்து சசிகலா தரப்பினரை கட்சியை விட்டு விலக்க முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே ஓபிஎஸ் அணியினர் சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் பிரிந்து சென்றனர். தற்போது பழனிச்சாமி அணியினரும் தினகரனை ஒதுக்கி வைத்துவிட்டனர்.
இந்நிலையில் பன்னீர்செல்வம் அணியும், பழனிச்சாமி அணியும் இணைய உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல உள்ளனர்.
மேலும் திருவாரூரில் நாளை நடைப்பெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கலந்துக்கொள்கின்றனர்.