செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (08:37 IST)

அதிமுக பொதுசெயலாளராகிறாரா சசிக்கலா..? – இன்று நீதிமன்றம் தீர்ப்பு!

சசிக்கலாவை அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கியது குறித்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த நிலையில் அவர் வகித்த அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பை சசிக்கலா ஏற்றுக் கொண்டார். பின்னர் 2017ல் சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்ற நிலையில் அவரையும், டிடிவி தினகரனையும் அதிமுக கட்சி பொறுப்பிலிருந்து நீக்குவதாக அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அறிவித்தனர்.

அதிமுக பொதுச்செயலாளர் இல்லாமல் பொதுக்குழு கூட்டி எடுத்த முடிவு செல்லாது என அறிவிக்க வேண்டும் என சசிக்கலா தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஈபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.