1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 7 ஏப்ரல் 2022 (23:39 IST)

இழிவுபடுத்தும் வகையில் மீம்ஸ் வெளியிடக்கூடாது-ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை

Vijay
இழிவுபடுத்தும் வகையில் மீம்ஸ் வெளியிடக்கூடாது என ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் பீஸ்ட் படத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் வரும் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 இவரது விஜய்66 என்ற படத்தின் பூஜை  இன்று நடைபெற்றது. இதில் , இயக்குநர் வம்சி சரத்குமார்,பாடலாசிரியர் விவேக், ராஷ்மிகா மந்தா உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலானது.

 இ ந் நிலையில், இழிவுபடுத்தும் வகையில் மீம்ஸ் வெளியிடக்கூடாது என ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் விஜய் சார்பில் ரசிகர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  இந்த அறிக்கையை  விஜய் மக்கள் இயகக்த்தின் பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.

அதில்,  அரசுப் பதவிகளில், உள்ளோர்களை, அரசியல் கட்சித் தலைவர்களை மற்றும் எவரையும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிக்கைகளில்,  இணையதளனங்கள்  போன்ற எதிலும்  எழுதவோ மீஸ் உள்ளிட்டவற்றை  இயகக்தினர் வெளியிடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் இந்த  அறிவிப்பை யாராவது மீறீனால் அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதுடன் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.