1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. IPL 2022 Lucknow wins Delhi Capitals

ஐபிஎல் 2022-; டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி லக்னோ வெற்றி

delhi lucknow
15 வது ஐபிஎல் திருவிழா இந்த  ஆண்டு ஆண்டு இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிராக  லக்னோ அணி   6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் ஜெயிண்ட் அணியின் கேப்டன் கே.எல்ராகுல்  பவுலிங் தேர்வு செய்தார்.

எனவே ரிஷப் பாண்டி தலைமையிலான டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதில், பிரித்வி ஷா 61 ரன்களும்,வார்னர் 4 ரன்களும், பண்ட் 39 ரன்களும், சர்பாஸ் ஆன் 36 ரன்களும், எடுத்தனர். எனவே டெல்லி அணி 20 ஓவர்களில் 3  விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் அடித்து   லக்னோ அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த லக்னோ அணியில், காக் 80 ரன்களும், ராகுல் 24 ரன்களும், பாண்ட்யா 19 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.  எனவே 19 .4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன் கள் எடுத்து வெற்றி பெற்றனர்.

டெல்லி அணி சார்பில் குல்தீய்ல் சிங் 2 விக்கெட்டும், யாதவ் 1 விக்கெட்டும், தாகூர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல் 2022: பஞ்சாப் - குஜராத் இன்று மோதல்!