1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 7 ஏப்ரல் 2022 (23:04 IST)

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நீதிமன்றம் கேள்வி!

sivakarthikeyan
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சென்னை  உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சிவகார்த்திகேயன் மனு தாக்கல் செய்திருப்பது பொய்யானது என நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மிஸ்டர் லோக்கல் என்ற திரைப்படத்திற்கு 15 கோடி தனக்கு சம்பளம் என்றும் அதில் 11 கோடி மட்டுமே தரப்பட்டதாக சிவகார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ஞானவேல்ராஜா, சிவகார்த்திகேயன் உண்மையை மறைத்து மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஞானவேல் ராஜா பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும, சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால் மிஸ்டர்  லோக்கல் படம் எடுக்கப்பட்டது எனவும்   மிஸ்டர் லோக்கல் படத்தால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் என ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

இ ந் நிலையில் இந்த சம்பள விவகாரம் தொடர்பாக் 3 ஆண்டுகளாக ஏன் வழக்குத் தொடரவில்லை? டிடிஎஸ் தொடர்பான மனு நிலுவையில்  உள்ள நிலையில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது ஏன் ?  என  சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.